தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மருத்துவ குணம் வாய்ந்த உதிர வேங்கை மரத்தை மக்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். வெண்பாகோட்டை கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கு மேலாக இந்த உதிர வேங்கை மரம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மிகவும் பழமையான மரத்தை தொட்டுக்கூட பார்க்காமல், தெய்வத்தை போல் பாதுகாக்கும் ஊர்மக்கள், அதிலிருந்து தானாக கீழே விழும் இலை, பட்டை ஆகியவற்றை மருத்துவத்திற்கு பயன்படுத்துகின்றனர். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு மாமருந்தாக சொல்லப்படும் உதிர வேங்கை மூலிகை மரம் திருடப்படுவதால், கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் இரவு பகலாக அதை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.