தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள எல் ஜி எம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு, சென்னை வடபழனியில் நடைபெற்றது. அதில் பேசிய சாக்ஷி தோனி, தோனிக்கும் தமிழ் மக்களுக்கும் மொழி ஒரு தடையாக இருந்ததில்லை என கூறினார். தோனியை வைத்து படம் எடுத்தால், அது ஆக்ஷன் படமாக இருக்கும் எனவும் கூறிய சாக்ஷி, நல்ல கதைகள் கிடைத்தால் தோனி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.