1 லட்சம் கட்டினால் மாதம் 12 ஆயிரம் வட்டி... ஆசை காட்டி ஆட்டையை போட்ட பலே கும்பல்...

Update: 2023-06-07 00:09 GMT

அதிக வட்டி கொடுக்றதா சொல்லி , வடிகையாலர்களுக்கு விபூதி அடிக்ற போலி நிதி நிறுவனங்கள் எக்கசக்கமா அதிகரிச்சுக்கிடே இருக்குது... அப்படி ஒரு தங்க நகை நிருவனத்துல பணத்த கொடுத்து ஏமாந்தவங்க இப்போ காவல் நிலையத்துக்கு நடையோ நடனு நடந்துகிட்டு இருக்காங்க..

300 கோடிய சுருட்டுன மோசடி குமப்ல் சிக்குமா..

சென்னை, அசோக் நகர் பொருளாதார குற்றபிரிவு அலுவலகம் அன்று மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்து போனது.

கிட்டதட்ட 100க்கும் மேற்பட்டோர் அந்த அலுவலகத்தின் வெளியே கால்கடுக்க காத்து கிடந்தனர்.

இவர்கள் இன்றோ நேற்றோ கூடியவர்கள் அல்ல, கடந்த இரண்டு மாதமாக தங்களது அன்றாட வேலைகளை விட்டுட்டு தினமும் இங்கு வந்து செல்பவர்கள்.

ஒவ்வொருவரின் முகத்திலும் தாங்கள் போட்ட பணம் வருமா வராதா என்ற ஏக்கம் குடிகொண்டிருந்தது. ஆம் இவர்கள் அனைவரும் பணத்தை கட்டி ஏமார்ந்த மிடில் கிளாஸ் குடும்பஸ்தர்கள்.

அனைவரின் கைகளிலும் இருக்கும் ஏ.ஆர்.டி ஜுவல்லர்ஸின் விளம்பர பதாகை தான் இந்த ஒட்டு மொத்த கூட்டத்தின் பிரச்சனைக்கும் காரணம்.

இந்த வீடியோவில் மாற்றத்தை கொண்டுவருவதாக பேசிய இதே நல்ல உள்ளங்கள் தான் இன்று 300 கோடி ரூபாயை சுருட்டி கொண்டு வாடிக்கையாளர்களுக்கு விபூதி அடித்திருக்கிறார்கள்.


வட்டியில்லா நகை கடன், ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் மூன்றாயிரம் ரூபாய் வட்டி, அசல் விலையில் தங்க நகை, ஒரு லட்சம் கட்டினால் ஒன்னரை லட்சத்துக்கு தங்க நகை இப்படி ஏகபட்ட ஆபர்களை அள்ளி வீசிய இவர்களது பெயர், ஆல்வின் மற்றும் ராபின்.

ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இவர்களின் நகை கடை செயல்பட்டு வந்திருக்கிறது.

இவர்களின் கவர்சிகரமான ஆஃபர்களை உண்மை என நம்பி ஏராளமான பொதுமக்கள் பணம் நகை என இன்வெஸ்ட் செய்திருக்கிறார்கள்.

ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் முப்பதாயிரம் வட்டி தருவதாக மக்கள் பணத்த ஏப்பம் விட்ட ஆருத்ரா மாதிரி நாங்க ஏமாத்த மாட்டோம் என்று சொல்லியோ, பலரை ஏமாற்றியிருக்கிறார்கள் இந்த ஏஆர்டி சாகோதரர்கள்.


ஒருத்தன ஏமாத்தனும்னா அவன்கிட்ட கருனைய எதிர்பார்க்கக்கூடாது அவன் ஆசைய தூணடனும்னு சதுரங்க வேட்டை படத்துல சொன்னதையே வேதவாக்கா எடுத்துக்கிட்டு ஏஆர்டி சகோதர்கள், மக்கள் ஆசைய எப்படிலாம் தூண்டலாம்னு ரூம் போட்டு யோசிச்சு போட்ட பல பிளான்ல ஒன்னு தான் இந்த வட்டியில்லா நகை கடன்.

இவர்கள் கூறியதை நம்பி சென்னையை சேர்ந்த பாலா, தன்னுடைய நகையை ஏஆர்டி ஜூவலர்ஸ்சில் அடகு வைத்து பணம் வாங்கியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு அந்த நகைகளை அவரால் மீட்கமுடியாமல் போயிருக்கிறது.

பாலா மாதிரி ஏராளமானோருக்கு ஏஆர்டி ஜூவலர்ஸ் விபூதி அடித்திருக்கிறது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கவே, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி 7.5லட்சம் பணம், 80லட்சம் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், வங்கி கணக்கில் இருந்த 3.5 லட்சம் ரூபாய் முடக்கம் செய்தனர்.

மேலும் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த ஏஆர்டி நிறுவனத்தின் இயக்குனர்களான ஆல்வின் மற்றும் ராபினை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

நாளுக்கு நாள் ஏஆர்டி சகோதர்கள் மீது ஏராளனமான புகார்கள் குவிந்து வந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் இருக்க, அவர்கள் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள்.


பாதிககப்பட்ட மக்கள் என்றாவது ஒரு நாள் தங்களுடைய பணம், நகை திரும்பி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்கும்மா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்