"கடலுக்குள் தூண்டில் வளைவு அமைக்க தடை இல்லை" - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
நெல்லை கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே 5 கோடி ரூபாய் செலவில் வண்ண மீன் காட்சியகம், வண்ண மீன் சில்லறை விற்பனையகம் அமைக்கப்படவுள்ளது. இந்த காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடலுக்குள் தூண்டில்கள் அமைப்பதற்கு எந்த விதமான தடையும் இல்லை என்று கூறினார். ஆனால், குறுக்கு சுவர் கட்டுவதற்கும் கற்களை போடுவதற்கும்தான் தடை உள்ளது என்றும் அவர் கூறினார். அந்த தடைகளையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.