திருநங்கையிடம் பணம் கேட்ட இளைஞர்.. போலீசார் முன்னே ஓட ஓட விரட்டி தாக்குதல் - நிர்வாணமாக நிற்க முயன்றதால் பரபரப்பு
செங்கத்தில் இளைஞர் ஒருவரை உருட்டு கட்டையால் திருநங்கைகள் விரட்டி, விரட்டி சராமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு நேற்று கஞ்சா போதையில் வந்த விக்னேஷ் என்ற இளைஞர் திருநங்கை சுஜாதாவிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த சக திருநங்கைகள் விக்னேஷை உருட்டு கட்டையால் துரத்தி துரத்தி அடித்தனர்.
அவர்களிடம் இருந்து இளைஞரை மீட்க முயன்ற போலீசார் முன்பும் திருநங்கைகள் சராமாரியாக தாக்கினர். போலீசார் திருநங்கைகளை தடுத்தால் ஆத்திரம் அடைந்த ஒரு திருநங்கை தனது ஆடையை கழற்றி நிர்வாணமாக நிற்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவழியாக இளைஞரை மீட்ட போலீசார் செங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.