பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணும்..பிறந்த குழந்தையும் உயிரிழப்பு

Update: 2022-12-11 10:07 GMT

முசிறி அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணும், பிறந்த குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி அருகே வசித்து வந்த தம்பதி தங்கதுரை-ஆர்த்தி. ஆர்த்தி கர்ப்பமடைந்த நிலையில், பிரசவத்திற்காக சோளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கு ஆர்த்திக்கு பெண் குழந்தை பிறந்து பின்னர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, ஆர்த்தியின் உடல்நிலை மோசமடைந்ததால், திருச்சு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்ற போது, செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஆர்த்தியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்