"விரட்டும் டைட்டானிக் சாபம்..!" - ரிமோட் மூலம் இயக்கப்பட்ட நீர்மூழ்கி... உள்ளே சிக்கிய மெகா கோடீஸ்வரர்கள்...? - விபத்தின் பின்னணியில் யார்..?

Update: 2023-06-22 01:43 GMT

அட்லாண்டிக் ஆழ்கடலில் கிடக்கும் டைட்டானிக் கப்பல் சிதைவுகளை காணச் சென்று மாயமான நீர்மூழ்கியில் இருப்பவர்கள் யார்...? நீர்மூழ்கி எதனால் விபத்தில் சிக்கியிருக்கிலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

நீர்மூழ்கியில் பிரிட்டனை சேர்ந்த 58 வயது கோடீஸ்வரரான ஹாமிஷ் ஹார்டிங் பயணம் செய்திருக்கிறார். டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்க போவதாக பெருமையுடன் அவர் தனது சமூக வலைதள பகுதியில் தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் தொழில் அதிபரான ஷன்சாதா தாவூத், அவரது 19 வயது மகன் சுலைமான் தாவூத் நீர்மூழ்கியில் பயணம் செய்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கடற்படை கமாண்டர் பால் ஹென்றியும் நீர்மூழ்கியில் பயணம் செய்திருக்கிறார். 77 வயதாகும் பால் ஹென்றி டைட்டானிக் கப்பல் குறித்த தகவல்களை அறிவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர்.

கடற்படையிலிருந்து விலகியதுமே டைட்டானிக் கப்பலை கண்டுபிடிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் பால் ஹென்றி.

டைட்டானிக் சுற்றுலாவை அறிமுகம் செய்த ஓஷன்கேட் சி.இ.ஓ. ஸ்டோக்கன் ருசும் அந்த நீர்மூழ்கியில் கடலுக்குள் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

நீர்மூழ்கியில் வியாழக்கிழமைக்குள் ஆக்சிஜன் தீர்ந்துவிடும் என்ற சூழலில் அதற்குள் அதனை கண்டுபிடிக்க வேண்டும் என்ற காலத்திற்கு எதிரான போராட்டம் அட்லாண்டிக்கில் தொடங்கியிருக்கிறது.

இதற்கிடையே டைட்டானிக் நீர்மூழ்கியின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. ஆபத்து காலங்களில் வெளியேற எந்த பாதுகாப்பு வசதியும் இல்லாத ரிமோர்ட் வாயிலாக இயக்கப்படும் நீர்மூழ்கியில் மனிதர்கள் கடலுக்குள் அனுப்பியது எப்படி என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது.

நீர்மூழ்கி மாயமானதற்கு பல்வேறு காரணங்கள் நிபுணர்களால் சொல்லப்படுகிறது

நீர்மூழ்கியை உள்ளிருந்து இயக்கியதாக கூறப்படும் ஓஷன்கேட் சி.இ.ஓ. ஸ்டோக்கன் ருஸ் அதில் போதிய நிபுணத்துவம் பெற்றவர் இல்லை என்ற கூற்றும் முன்வைக்கப்படுகிறது. இதற்கிடையே நீர்மூழ்கிக்கான மின்சாரம் தடைபட்டிருக்கலாம், பாதுகாப்பற்ற மின் கட்டமைப்பால் மின் விபத்தும் ஏற்பட்டிருக்கலாம் எனவும் நீர்மூழ்கி வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்