ரஷ்ய படைகளின் இலக்கு.. ஆச்சர்யத்தை கிளப்பிய உக்ரைன் மக்கள்

Update: 2022-11-02 12:11 GMT

போர் உக்கிரமாக நடைபெற்று வரும் சூழலிலும் உக்ரைன் நகரமான பக்முத்தில் இருந்து வெளியேற மக்கள் மறுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பக்முத் நகரில் தொடர்ந்து முன்னேறும் முயற்சியில் ரஷ்ய படைகளும், எதிர்த் தாக்குதல் நடத்தும் முனைப்பில் உக்ரைன் படைகளும் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் முக்கிய தொழில்துறை நகரங்களான லைசிசான்ஸ்க் மற்றும் சீவிரோ டோனெட்ஸ்க் ஆகியவற்றைக் கைப்பற்றியதில் இருந்து டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் வழியாக செல்ல பக்முத் நகரம் ரஷ்ய படைகளின் இலக்காக உள்ள நிலையில், தீவிர போருக்கு மத்தியிலும் அந்நகர மக்கள் பலர் வெளியேற மறுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்