#BREAKING || கடல் அலையில் சிக்கி பலியான மாணவன்.. கல்வி நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2023-03-23 10:51 GMT

கல்வி நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் தனியார் பொறியியல் கல்லூரியின் சார்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர் மதனகோபால், கடல் அலையில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில், ரூ. 25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தாய் சர்மிளா மற்றும் சகோதரி வழக்கு

நிகழ்ச்சியை நடத்துவது குறித்து கல்லூரி தரப்பில் தகவல் தெரிவிக்கவில்லை. தெரிவித்திருந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் - மாவட்ட ஆட்சியர்

எவரும் கடலில் இறங்கக் கூடாது என அறிவிக்கப்பட்ட பின்பும், மதனகோபால் கடலில் குதித்து உயிரிழந்ததால் தங்களை பொறுப்பாக்க முடியாது - தனியார் கல்லூரி

மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்