பராசக்தியில் தீப்பொறி பறக்கும் வசனங்கள்... நவரசங்களை வெளிப்படுத்திய நடிகர் திலகம் மறைந்த தினம்- பத்ம பூஷண், தாதா சாகேப் பால்கே விருதுகள்
நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலமான தினம் இன்று.
1928ல் விழுப்புரத்தில் பிறந்த வி.சி.கணேசன், பின்னர் குடும்பத்துடன் திருச்சிக்கு குடி பெயர்ந்தார். ஏழு வயதில் பெற்றோருக்கு தெரியாமல் திருச்சியில் முகாமிட்டிருந்த மதுரை ஸ்ரீபாலகான சபா என்ற நாடகக்குழுவில் சேர்ந்தார்.
1952ல் பராசக்தி என்ற சமூக சீர்திருத்தம் பேசும் புரட்சிகர படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிவாஜி கணேசன், கருணாநிதியின் வசனங்களை அனல் பறக்க பேசி பெரும் புகழ் பெற்றார்
வீரபாண்டிய கட்டபொம்மனாக கர்ஜனை செய்து, வெள்ளையர்களை மிரட்டினார்
திருவிளையாடல் திரைப்படத்தில் சிவபெருமானாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
கெளரவம் படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்தாக கலக்கி யிருப்பார்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான முதல் மரியாதை படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
பத்ம பூஷண், செவாலியே, தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
ஆரம்ப நாட்களில் திராவிட இயக்கத்தில் இருந்த சிவாஜி கணேசன், 1961ல் காங்கிரஸில் இணைந்தார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரானார்.
1987ல் காங்கிரஸில் இருந்து விலகி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். 2001ல் தனது 73 வது வயதில் காலமானார்.
தமிழ் திரைபட வரலாற்றில் தனி முத்திரை பதித்த சிவாஜி கணேசன் மறைந்த தினம், 2001 ஜூலை 21.