கொளுத்தி எடுக்கும் கோடைக்காலம்... சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பா?
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, வீராணம் ஆகிய 6 ஏரிகள் சென்னை மாநகரத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ளன.
இந்த 6 ஏரிகளிலும் மொத்தம் 1,322.2 கோடி கன அடி, அதவாது 13.2 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.
வடகிழக்கு பருவமழை மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தண்ணீர் மூலம் இந்த ஆறு ஏரிகளில், தற்போது மொத்தம் 8.3 டி.எம்.சி தண்ணீர் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 364.5 கோடி கன அடி. இதில் தற்போது 281.2 கோடி கன அடி நீர் உள்ளது.
புழல் ஏரியின் கொள்ளளவு 330 கோடி கன அடி. இதில் தற்போது 242.2 கோடி கன அடி நீர் உள்ளது.
சோழவரம் ஏரியின் கொள்ளளவு 108.1 கோடி கன அடி. இதில் தற்போது 79 கோடி கன அடி நீர் உள்ளது.
பூண்டி ஏரியின் கொள்ளளவு 323.1 கோடி கன அடி. இதில் தற்போது 1,22 கோடி கன அடி நீர் உள்ளது.
கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் கொள்ளளவு 50 கோடி கன அடி. இதில் 47.5 கோடி கன அடி நீர் உள்ளது.
வீராணம் ஏரியின் கொள்ளளவு 146.5 கோடி கன அடி. இதில் தற்போது 58.9 கோடி கன அடி நீர் உள்ளது.
வீராணம் ஏரியையும் சேர்த்து, 6 ஏரிகளில் மொத்தம் 8.32 டி.எம்.சி. நீர் உள்ளது.
இவை தவிர அடுத்த மாதம் 2 டி.எம்.சி அளவுக்கு கிருஷ்ணா நதி நீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகர மக்களுக்கு தினமும் 1,00 முதல் 110 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
குழாய் வசதி இல்லாத இடங்களுக்கு தினமும் 418 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.