அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி, குற்றவாளிக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்ததாகவும், சார் என்று கூறி, குற்றவாளி பேசியதாகவும் முதலில் செய்திகள் வெளிவந்தன என்றும், ஆனால், அதனை அப்படியே வெளிவராமல் மறைக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினையை மடைமாற்றி, உண்மையை மறைத்துவிடலாம் என்ற நோக்கம் திமுக அரசுக்கு இருக்குமேயானால், திமுக அரசுக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாகத் தான் கருத முடியும் என்றும் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.