பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பண்டக்குழிகள் கண்டெடுப்பு
திருப்பத்தூரில், பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பண்டக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அடுத்த மைக்கா மேடு பகுதியில் தனியார் நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய 5-க்கும் மேற்பட்ட பண்டக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கள ஆய்வு நடத்திய போது, அக்கால மக்கள் பயன்படுத்திய சாமை என்ற தானியம் இன்றளவும் காணப்பட்டது. முன்னோர்கள் பயன்படுத்திய தானியக்கிடங்கிற்கு இது ஒரு சான்றாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.