கடந்த சில நாட்களாக சென்னைவாசிகளை கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று குளுகுளுவென மழை கொட்டித் தீர்த்தது... எழும்பூர், அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் பெருங்குடி, பட்டினப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர் ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்த நிலையில், குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.