நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்.. அதிர்ச்சி அளிக்கும் பலி எண்ணிக்கை..! | Nepal

Update: 2023-01-15 14:19 GMT

நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் உள்ள பொக்ராவில் உள்நாட்டு விமான நிறுவனமான எட்டி ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று இன்று விபத்திற்குள்ளானது... காத்மாண்டுவில் இருந்து பொக்ராவுக்குச் சென்ற எட்டி ஏர்லைன்ஸின் ஏடிஆர் 72 விமானம் காஸ்கி மாவட்டத்தின் பொக்ராவில் விழுந்து நொறுங்கியது... 2 கைக்குழந்தைகள் உட்பட 53 நேபாள நாட்டவர்களுடன், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவர், 2 கொரியர்கள், அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பிரெஞ்சுக்காரர் விமானத்தில் பயணித்துள்ளனர். வானிலை திடீரென மாறி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், 68 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்து காரணமாக, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அண்மையில் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்