தப்பிச்சென்ற சிம்பன்சிகளை சுட்டுக்கொன்று கருணை கொலை என சொன்ன பூங்கா

Update: 2022-12-16 01:56 GMT

சுவீடனின் ஃப்ருவிக் விலங்கியல் பூங்காவிலிருந்து புதன்கிழமை மதியம் 5 சிம்பன்சிகள் வெளியேறியுள்ளன.

உடனடியாக அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிம்பன்சிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் 3 சிம்பன்சிகள் உயிரிழந்த நிலையில், ஒன்று காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறது.

5 ஆவது சிம்பன்சி பூங்காவிற்கே திரும்பி வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியிருக்கும் நிலையில், சிம்பன்சிகள் மிகவும் ஆபத்தானவை, அவைகள் கட்டுப்படுத்தும் மருந்துகள் இல்லாததால் கருணை கொலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் இது மனிதநேயமற்ற செயல், மிகவும் கண்டனத்திற்குரியது என விலங்குகள் ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்

Tags:    

மேலும் செய்திகள்