உடல் கருகி பலியான வடமாநில தொழிலாளி... கொலையா..? தற்கொலையா..? - ஈரோட்டில் அதிர்ச்சி
ஈரோட்டில் உள்ள தனியார் சலவை ஆலையில் பணியாற்றிய வட மாநில தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் தாசில்தார் தோட்டத்தில் தனியார் சலவை ஆலை இயங்கி வருகிறது. அங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த நிக்கில் என்ற இளைஞர் கடந்த ஒன்றரை மாதமாக வேலை பார்த்து வந்தார். நிக்கில் பணிக்கு வாராததால், சக ஊழியர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்த போது, உடல் கருகிய நிலையில் உயிரிழந்து இருக்கிறார். இது குறித்து தகவல் கிடைத்த கருங்கல்பாளையம் போலீசார், நிக்கில் உடலை கைப்பற்றி தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.