கோவை மத்திய சிறைச்சாலை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பிளிச்சி பகுதியில் புதிதாக மாற்றப்படவுள்ள நிலையில் அப்பகுதியை இன்று சிலை கடத்தல் புலனாய்வு பிரிவு காவல்துறை ஏடிஜிபி சைலேஷ் குமார் யாதவ் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது சிறைச்சாலை நுழைவு பகுதி மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட உள்ள இடங்கள் குறித்து உடனிருந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தற்போதைய சிறைச்சாலை மைதானத்தில் 172 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.