சிதம்பரம் நடராஜர் கோயிலில் முடிவுக்கு வந்த பிரச்சினை |

Update: 2023-06-28 09:04 GMT

4 நாள் இடைவெளிக்கு பிறகு காலை முதல் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற்றது. இதனால், 24 முதல் 27ம் தேதி வரை பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய முடியாது என தீட்சிதர்கள் அறிவிப்பு பதாகை வைத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அறநிலையத்துறை அதிகாரிகள் பதாகையை அகற்றச் சென்றனர். அப்போது தீட்சிதர்கள் - அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்படவே, செயல் அலுவலர் சரண்யாவை தீட்சிதர்கள் பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகர் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறையினர் அதிரடியாக அறிவிப்பு பதாகையை அகற்றினர். பக்தர்களை கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், தீட்சிதர்கள் ஒத்துழைக்கவில்லை. 4 நாள் முடிந்ததால் இன்று முதல் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை கோயில் நடை திறந்ததும் பூஜைகள் முடிந்த பிறகு பக்தர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்