நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய தக்காளி.. அதிர்ச்சி ரிப்போர்ட்...

Update: 2023-07-13 04:59 GMT

நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மே மாதம் 4 புள்ளி 25 சதவீதமாக இருந்த இந்தியாவின் சில்லறை பணவீக்கம், ஜூன் மாதத்தில் 4 புள்ளி 81 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றமே, இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சில்லறை பணவீக்கம் உயரும் என்பது ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தாலும், ரிசர்வ் வங்கியின் வரம்பான 6 சதவீதத்திற்குள் இருப்பதால், ரெப்போ விகிதம் உயர்வதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்