நிற்காமல் சென்ற அரசு பேருந்துகள்... சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் PROTEST | GOVT BUS

Update: 2023-07-04 03:04 GMT

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, அரசுப்பேருந்துகள், பேருந்து நிலையத்தில் முறையாக நின்று செல்லவில்லை எனக்கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பாசமுத்திரத்தில் இருந்து நெல்லை செல்லும் பிரதான நெடுஞ்சாலையில், கரம்பை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள பேருந்துள்ள நிலையத்தில், பேருந்துகள் முறையாக நின்று செல்வதில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி குழந்தைகளுடன், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து, கிராம மக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்