பெண் பஞ்சாயத்து தலைவர் சொன்ன வார்த்தை..."என்ன நடக்கிறது?" - கூட்டத்தில் பெரும் பரபரப்பு

Update: 2024-11-24 03:45 GMT

சங்கரன்கோவில் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தான் தலித் பெண் பஞ்சாயத்து தலைவர் என்பதால் எங்களை புறக்கணிப்பதாக பஞ்சாயத்து தலைவர் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது. புன்னைவனம் பஞ்சாயத்து தலைவராக பூமணி என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவராவார். இந்நிலையில் புன்னைவனத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தனது பஞ்சாயத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாத‌தால், அடிப்படை வசதிகள் எதுவும் செய்யமுடியவில்லை என்று பூமணி ​வேதனை தெரிவித்தார். மேலும், தான் தலித் பெண் பஞ்சாயத்து தலைவர் என்பதால், புறக்கணிக்கப்படுவதாகவும் கிராம சபைக் கூட்டத்தில் வேதனையாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்