முதல்வரால் டாக்டர் ஆக போகும் காய்கறி கடைக்காரரின் மகள் -மனமுருகி நன்றி சொன்ன பெற்றோர் | MKStalin

Update: 2023-02-09 02:37 GMT

கும்பகோணத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி மகள்,

முதலமைச்சர் ஸ்டாலின் உதவியால் பல் மருத்துவர் ஆகிறார்.

திருக்கடையூரில் கடந்த 2020 ஆண்டு நடந்த 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி நடந்தது. அப்போது, கும்பகோணத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஜெகநாதன் என்பவரின் மகள் உதயா என்பவர் பல் மருத்துவராக படிப்பதற்கு வசதி இல்லை என்று கூறி, உதவி கேட்டார். அப்போது

அங்கிருந்த கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், அடுத்த நிமிடமே அந்த செலவை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.

பல் மருத்துவ படிப்பிற்கு தேவையான மொத்த பணம் 25 லட்சம் ரூபாயை நான்காண்டு காலமும் வழங்கி வரும் நிலையில், படிப்புக்கான நிறைவு தொகை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ வழங்கி நிறைவு செய்தார். மகள் உதயாவின் கனவான பல் டாக்டர் படிப்பை நினைவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு, பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்