4 வயது குழந்தையை புதருக்குள் வைத்து சிதைத்த கொடூரன் - போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

Update: 2022-11-02 15:37 GMT

மத்தியபிரதேசத்தில் 4 வயது சிறுமியிடம் செல்போனில் வீடியோ காண்பித்து ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த உணவக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மத்தியபிரதேசத்தில் நான்கு வயது குழந்தை ஒருவர் தனது பெற்றோருடன் தீபாவளி பண்டிகைக்காக உறவினரின் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். அப்போது, அருகில் இருந்த ராஜ்குமார் என்ற உணவக ஊழியர் ஒருவர் தினமும் அக்குழந்தைக்கு செல்போனில் வீடியோ காண்பித்து அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து, திடீரென மாயமான குழந்தையை எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகாரளித்துள்ளனர். இவ்வழக்கை தனிப்படை அமைத்து தேடிய போலீசார் விசாரணையில் உணவக ஊழியர் ராஜ்குமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கையில் அவர் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததையும், குழந்தையை அருகில் உள்ள புதரினுள் வைத்திருப்பதையும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது. ராஜ்குமாரை கைது செய்த போலீசார் இவ்வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்