விவசாயிகள் தலையில் பேரிடியை இறக்கிய 5 நாள் கனமழை

Update: 2024-11-19 13:40 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, சம்பா பயிர் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளிலும் வயல்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. கட்டேரி வடிகால் தூர்வாரப்படாததால் வயல்களில் தேங்கிய நீர் வெளியேற முடியாமல், சில இடங்களில் உடைந்து வயல்களுக்குள் சென்றுள்ளது. இன்னும் தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் அழுகி விடுமோ என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்