'எங்க தலைக்கு தில்ல பாத்தியா!' - போலீஸையே தாக்கி செல்போனை பறித்த சிறுவர்கள்
போலீஸ்காரரை தாக்கி செல்போன் பறிப்பு - 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
காரைக்காலில், போலீஸ்காரரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் போக்குவரத்து போலீசாக பணியாற்றி வரும் பிரகாஷ் என்பவர், காரைக்கால் அடுத்த பிள்ளை தெருவாசல் சந்தைதிடலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக தாக்கிவிட்டு, விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்றது. படுகாயமடைந்த காவலர் பிரகாஷ், அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில், விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை கைது செய்தனர்.