புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மாயம்.. உடலை தோண்டியெடுத்து எரித்த பெற்றோர்

Update: 2022-10-29 07:40 GMT

மதுராந்தகத்தில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் உடலில் தலை மாயமான நிலையில் இருந்ததால், மீண்டும் உடற்கூறாய்விற்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் உடல் நேற்று மயானத்தில் எரிக்கப்பட்டது.

மதுராந்தகம் அருகே சித்திரவாடியில் வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது, அருகில் உள்ள மின்கம்பம் ஊழியர்களின் பணியின் போது முறிந்து விழுந்தது. இதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமியின் உடலை வாங்கி பெற்றோர்கள் அடக்கம் செய்தனர். இந்நிலையில், சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் சில சந்தேகத்திற்குரிய தடயங்கள் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து, தோண்டி எடுக்கப்பட்ட சிறுமியின் உடலில் தலை மாயாமாக இருந்ததை கண்டு அணைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால், சிறுமியின் உடல் மீண்டும் உடற்கூராய்விற்காக மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூராய்வு முடிந்து சிறுமியின் உடலை காவல் துறையினர் முன்னிலையில் பெற்றோர்கள் மயானத்தில் எரித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்