தி.மலையை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை.. 2016-ஆம் ஆண்டில் நடந்த அதே சம்பவம்..போலீசாரை திகைக்க வைக்கும் கொள்ளை

Update: 2023-02-13 04:51 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில், ஏடிஎம் தொழில்நுட்பம் பற்றி நன்கு அறிந்த நபர்களே திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 75 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில், கொள்ளை நடைபெற்ற ஏடிஎம் இயந்திரங்கள் பெரிட்டோ மற்றும் டிபோல்ட் வகைகளை சார்ந்தது என்றும், இதனை சுலபமாக உடைக்க முடியாது எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதனால், ஏடிஎம் பழுதுபார்க்கும் குழுவினரோ... அல்லது ஏடிஎம் தொழில்நுட்பம் குறித்து அறிந்த கும்பலோ கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு இதே பாணியில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டதும், இந்த வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த 17 பேரை கர்நாடகாவில் வைத்து போலீசார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்