ஆப்கானிஸ்தானில் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கான் தலைநகர் காபூலில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வெளியே தற்கொலைப்படை தாக்குதல் பயங்கரவாதி, தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான்.
வெடிகுண்டு வெடித்து சிதறியதில் அப்பகுதியில் இருந்த 20 பேர் உடல் சிதறி உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
. படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறிய போது, வெளியுறவுத்துறை அமைச்சக கட்டிடத்தில் தலிபான் அதிகாரிகளுக்கும், சீன அதிகாரிகளுக்கும் இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக சீனர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் சீனர்கள் வந்து செல்லும் ஓட்டலை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தது.
இயற்கை கனம் வளங்கள் கொட்டிக்கிடக்கும் ஆப்கானில் எண்ணெய் கிணறுகளை அமைக்க சீனா ஒப்பந்தம் செய்திருக்கும் நிலையில், இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது.