சென்னை ரயில் நிலையத்தில் பயங்கரம்.. பெண்ணை வெட்டி கொன்று தப்பிய கொடூரன்-பார்த்தவர் சொன்ன பகீர் தகவல்

Update: 2023-07-20 02:47 GMT

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...

சென்னை மீனம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி( வயது 34). இவர் புறநகர் ரெயிலில் சமோசா மற்றும் பழங்கள் விற்பனை செய்து வந்தார். வழக்கம்போல நேற்று இரவு 8.30 மணியளவில் எழும்பூரில் இருந்து கிண்டி நோக்கி சென்ற ரெயிலில் வியாபாரத்தை முடித்துவிட்டு சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது அதே ரயிலில் இருந்து இறங்கிய மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு, புறப்பட்ட அதே ரயிலிலே ஏறி தப்பி சென்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரயில் நிலையத்தின் உள்ளே சிசிடிவி கேமரா ஏதுமில்லாததால் குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜேஸ்வரிக்கு மூன்று கணவர்கள் உள்ளதால், குடும்ப பிரச்சனையின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்