ஹாஸ்டலில் பயங்கர விபத்து.. உடல் கருகி 19 மாணவர்கள் பலி - கயானா நாட்டில் அதிர்ச்சி

Update: 2023-05-23 02:54 GMT

கயானா நாட்டில், பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 மாணவர்கள் உயிரிழந்தனர்.

மஹ்டியா நகரத்தில், பழங்குடியின மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதியில் இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது. குளியலறை பகுதியில் திடீரென பற்றிய தீ, வேகமாக கட்டடம் முழுவதும் பரவியுள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில், 14 மாணவர்கள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 மாணவர்கள், பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கவலைக்கிடமான நிலையில் உள்ள 6 மாணவர்கள் விமானம் மூலம் தலைநகர் ஜார்ஜ்டவுனுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்