'ஆடுவது ஒரே சாமி, பேசுவது வெவ்வேறு கருத்தா!' 'நா உள்ள இறங்குனா.. அப்புறம் வேற மாறி..' இன்ஸ்பெக்டர் கருத்தால் சிரிப்பலை

Update: 2023-02-18 03:34 GMT
  • தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கோவிலில் ஒரு தரப்பினர் சாமி குப்பிட மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தனர்.
  • களப்பாகுளம் கிராமத்தில் உள்ள பெரியநாயகம் கோவிலில் ஒரு சமுதாயத்தை தரிசனம் செய்ய மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • பின்னர் வட்டாச்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.இதனைதொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருதரப்பினரும் தரினம் செய்தனர்.
  • அப்போது கருப்பசாமி சிலைக்கு பல்வேறு விதமான அபிஷேகம் நடைபெற்று கொண்டிருந்த போது, இரண்டு தரப்பை சேர்ந்த ஆண்களும், பெண்களும் போட்டி போட்டு சாமியாடினர்.
  • அவரவர்களுக்கு என்று ஆதரவாக குறி சொல்லி ஆடியதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
  • அப்போது, சாமியாடிய இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் மாதவன், ஒரே சாமியை இரண்டு பேரும் தனிதனியாக ஆடி வெவ்வெறு கருத்துக்களை எப்படி கூற முடியும் என்றார்.
  • தனக்கும் சாமியாட முடியும் என்றும், ஒழுங்கா சாமி கும்பிட்டு இடத்தை காலி செய்யுங்கள் என கூறினார். அப்போது பக்தர்கள் மத்தியில் சிரிப்பலை எழுத்தது.
Tags:    

மேலும் செய்திகள்