தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் திடீர் அனுமதி | chandrasekarrao | telungana
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு, வயிற்றுப்பகுதியில் திடீர் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் ஹைதராபாத் மருத்துவமனை, சந்திரசேகர ராவுக்கு அல்சர் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சிகிச்சை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.