ரூ.10 ஆயிரம் 'அண்டர் டேபிள்' டீலிங் - பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்

தஞ்சாவூரில், குடும்ப பிரச்சனை தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-31 07:25 GMT

கூத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், குடும்ப பிரச்சனை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இந்த மனுவை தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மகேந்திரன் என்பவர் விசாரித்தார். அப்போது, வழக்கை தள்ளுபடி செய்வதற்காக, ராஜேஸ்வரியின் மகன் வெள்ளைச்சாமியிடம் சிறப்பு சார்பு ஆய்வாளர் மகேந்திரன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து, ஊழல் தடுப்பு காவல் பிரிவில் வெள்ளைச்சாமி புகார் அளித்து விட்டு, சிறப்பு சார்பு ஆய்வாளர் மகேந்திரனிடம்10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர் ஆகியோர் மகேந்திரனை கைது செய்து, 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்