ஜக்கி வாசுதேவ் கடும் கண்டனம்

Update: 2024-11-27 04:21 GMT

வங்கதேசத்தில் இந்துமத துறவி சின்மயி தாஸ் கைது செய்யப்பட்டதற்கு ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு ஜனநாயக நாடு எவ்வாறு சிதைந்து மதவாத மற்றும் சர்வாதிகார நாடாக மாறுகிறது என்பதை பார்க்க மோசமானதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். வங்கதேசம் முழுவதும் நடைபெறும் வன்முறை, இந்து கோவில்கள் தகர்ப்பு மற்றும் இழிவுபடுத்தும் சம்பவங்கள் போன்றவை ஜனநாயக மதிப்புகள் முற்றிலும் சிதைந்து வருவதை காட்டுவதாகவும், மத ரீதியிலான ஒடுக்குமுறை, ஜனநாயக நாடுகளின் வழியல்ல எனவும் விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்