தமிழ்நாடா? தமிழ் நாயுடு-வா? ராமதாஸ் கடும் கண்டனம் | Tamilnadu | Ramadoss | ThanthiTV

Update: 2023-01-28 10:44 GMT

மத்திய அரசின் இணையதளத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாட்டின் பெயரை, உடனடியாக திருத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், குடியரசு தின சிறந்த ஊர்திக்கான வாக்கெடுப்பு இணைய பக்கத்தில், 'தமிழ்நாடு' என்பதற்கு பதிலாக 'தமிழ்நாயுடு' என இருப்பதாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்