திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தரிசன கட்டண உயர்வைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை கண்டித்து, மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் கூடிய இந்து முன்னணி அமைப்பினர், கோயில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு பஜனை பாடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.