மும்பை விமான நிலையம் திடீர் மூடல்..! அதானி குழுமத்தின் கையில் உள்ள இந்தியாவின் 2-வது பெரிய விமான நிலையம்

Update: 2022-09-24 11:19 GMT

மும்பை சத்திரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம், அதானி குழுமத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

டெல்லி விமான நிலையத்திற்கு அடுத்து, இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக, தினமும் சுமார் 800 விமானங்களை கையாள்கிறது.

9/27 என்ற பிரதான ஓடுதளம் மற்றும் அதன் குறுக்குவசமாக 14/23 என்ற இரண்டாம் நிலை ஓடுதளம் ஆகிய இரண்டு ஓடுதளங்களை கொண்டுள்ளது.

இந்த இரண்டு ஓடுதளங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, அக்டோபர் 18 காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, விமான நிலையம் மூடப்பட உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் பருவமழை முடிவடைந்த பின் நடத்தப்படும் முன் தடுப்பு பராமரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி இது என்று கூறியுள்ளது.

14/23 ஓடுதள எல்லைகளில் உள்ள விமான வழிகாட்டி விளக்குகளை மேம்படுத்தும் பணிகளும் இதில் மேற்கொள்ளப்பட உள்ளது.

விமான நிலையம் மூடப்படும் நேரத்தில் தரையிறங்க உள்ள விமானங்களின் பயண அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்