திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயணத்தையொட்டி, இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்க விட மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பாசறை பயிற்சி கூட்டம் மற்றும் வேளாண் சங்கமம் 2023 கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திருச்சி செல்கிறார். இதனையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.