காலை சிற்றுண்டி திட்டத்தின் எதிரொலியாக, அரசு பள்ளிகளில் மாணவ சேர்க்கை அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன...
அரசு பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வரும் கல்வியாண்டில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ சேர்க்கை இதுவரை 74 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் மட்டும் முதல் வகுப்பில் ஆயிரத்து 178 குழந்தைகளும் 2 முதல் 8ம் வகுப்பு வரையில் 61 மாணவர்கள் என மொத்தமாக ஆயிரத்து 239 பேர் சேர்ந்துள்ளனர். இதனிடையே ஆகஸ்ட் மாதம் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால், 5 லட்சம் மாணவர்கள் வரை அரசு பள்ளிகளில் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.