"மகனின் வளர்ப்பு குறித்து தவறாக பேசிய காவலர்" - மனமுடைந்து பஸ் முன் பாய்ந்த தந்தை

Update: 2022-10-27 05:57 GMT

கல்லூரியில் மாணவர்களிடையே கோஷ்டி மோதலில் இளைஞரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவரின் தந்தையை, காவலர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதால், மனமுடைந்த தந்தை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சென்னையை அடுத்த மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த கோஷ்டி மோதல் தொடர்பாக போலீசார், 9 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சஞ்சய் என்ற மாணவரின் தந்தை குமார் என்பவர், தனது மகனை விடுவிக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அப்போது, காவலர்கள் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி மகனின் வளர்ப்பு குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. காவலரின் அவதூறான பேச்சுகளால் மனமுடைந்த குமார், காவல் நிலையம் அருகே பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்