விஷம் கொடுத்து கொல்லப்பட்ட மாணவன் - சுகாதாரத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல் |

Update: 2022-09-08 09:17 GMT

காரைக்காலில் மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவன் பாலமனிகண்டனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி உட்பட 2 மருத்துவர்கள் குழுவினர் நேற்றைய முன்தினம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் நேரடியாக சென்று விசாரணை நடத்திய நிலையில் நேற்றைய தினம் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலுவிடம் விசாரணையின் அறிக்கையை மருத்துவ குழு தலைவர் முரளி தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று சுகாதாரத்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, மழையின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ளவர்களுக்கு ஜுரம், சளி பேன்றவை உள்ளதாகவும் இது விஷ காய்ச்சல் இல்லை என விளக்கம் அளித்த அவர், காரைக்காலில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மாணவனுக்கு மருத்துவர்கள் போதுமான சிகிச்சை அளித்துள்ளதாகவும், சிகிச்சையில் கவனக்குறைவு இல்லை என மருத்து குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் மருத்துவக்குழுவின் அறிக்கையை சுகாதாரத்துறை செயலரிடம் சமர்பிக்க உள்ளதாக தெரிவித்த அவர் மாணவனுக்கு எந்த விஷம் கொடுக்கப்பட்டது என்ற பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் எலி மருந்துகள் கடைகளில் எளிதாக கிடைக்கும் நிலையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளில் மட்டும் எலி மருந்து கிடைக்கும் வகையில் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்