"சங்பாரிவார் ஊதுகுழல்.. சர்ச்சை நாயகன்.. அத சொல்ல நீங்க யார்?" - ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு..!
தமிழ்நாடு என்பது சட்டமன்றத்திலேயே நிறைவேற்றபட்ட கருத்து என்றும், அது ஒன்றும் புதிதல்ல என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதற்கு சங்பரிவார் அமைப்புகளுக்கு தைரியம் இல்லாததால், ஆளுநரை அவர்கள் ஊதுகுழலாக பயன்படுத்துவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கிடைத்த தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற சொல்ல ஆளுநர் யார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், எந்த கட்சியாக இருந்தாலும் மதத்தை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்றார்.
தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து சர்ச்சை நாயகனாக இருப்பது அவரது பதவிக்கு அழகல்ல என அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்