மன அழுத்ததிற்கு ஆளான டிஐஜி...துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை

Update: 2023-07-08 01:30 GMT

DIG விஜயகுமார்...... கன்னியமான இளம் காவல் அதிகாரி... நேர்மையின் சிகரமாக பணி செய்தவர்... 47 வயதான இவர் தேனிமாவட்டம் போடி அடுத்த அணைக்கரனை பட்டியை சேர்ந்தவர். இவருக்கு கீதாவாணி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2003 ஆம் ஆண்டு குருப் 1 தேர்வு எழுதி டிஎஸ்பியாக காவல் துறையில் இணைத்த விஜயகுமார், அதன்பிறகு படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் 2009 ஆம் ஆண்டு யூபிஎஸ்சி தேர்வெழுதி ஐபிஎஸ் ஆக தேர்வானார்.

சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகபட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றிய விஜயகுமார் அரும்பாக்கம் வங்கி கொள்ளை, டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு மோசடி உள்ளிட்ட பல வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து அசத்தினார். கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் இன்று அதிகாலை வழக்கம் போல் நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி இருக்கிறார் விஜயகுமார். அப்போது மெய்காப்பாளரிடம் இருந்த துப்பாக்கியை கேட்டு வாங்கி இருக்கிறார்.அவ்வளவு தான் அடுத்த நொடி யாராலும் ஜீரணித்து கொள்ள முடியாத ஒரு கொடூரத்தை விஜயகுமார் அங்கே நிகழ்த்தி இருக்கிறார்.துப்பாக்கியை வாங்கியவர், எந்தவித தயக்கமும் இன்றி தனது நெற்றியில் வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள், விஜயகுமாரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு தற்கொலைக்கான காரணத்தை அறிய விசாரனையில் இறங்கி இருக்கிறார்கள்.

அப்போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆம்... தற்கொலைக்கு காரணம் விஜயகுமாரின் மன அழுத்தம் தான் என்று சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே டிஐஜி மன அழுத்ததுக்கு ஆளாகி இருக்கிறார். இது தொடர்பாக மருத்துவரிடம் அலோசித்து சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. மற்றபடி இந்த மரணத்திற்கு எந்த விதமான அரசியல் காரணங்களோ, குடும்ப சூழலோ, பணிச்சுமையோ இல்லை என்று சொல்லப்படுகிறது.. குறிப்பாக விஜயகுமாருக்கு வந்திருந்தது ஓசிடி கம் டிப்ரஷன் எனப்படும் ஒருவகையான மன அழுத்தம் என்றும் அதற்கு ஏற்றார்போல் அவர் மாத்திரைகளை எடுத்து வந்திருக்கிறார். இவரின் மன நிலை கருதியே அவரது மனைவியும், மகளும் கோவையிலேயே வந்து தங்கி இருக்கிறார்கள். இது தவிர உயர் அதிகாரிகள் பலரும் டிஐஜிக்கு கவுன்சிலிங் கொடுத்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனக்கு அதிகப்படியான மன அழுத்தம் உள்ளதென மருத்துவரிடம் கூறி, மாற்று மருந்து வாங்கி உட்கொண்டதாக சொல்லப்படுகிறது....இந்நிலையில் தான் இப்படி கொடூரமான ஒரு முடிவை டிஐஜி விஜயகுமார் எடுத்திருக்கிறார். அவர் கடைசியாக தன்னுடன் பணியாற்றிய அதிகாரிகளுக்கு நன்றி சொல்லும் ஒரு ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி வாழ்க்கை ஒரு மாயை என அவர் கூறிய தத்துவமும் நெஞ்சை பதற வைக்கிறது.இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், துப்பாக்கியை வாங்கி அதை பயன்படுத்த வேண்டும் என கேட்டாரா..? ஏன் அவரிடம் துப்பாக்கி கொடுக்கப்பட்டது...? தற்கொலைக்கான உண்மை காரணம் என்ன..? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்தி வருகின்றனர். முழு விசாரனைக்கு பிறகே அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

Tags:    

மேலும் செய்திகள்