வேகமெடுக்கும் கொடநாடு கொலை வழக்கு..- மீண்டும் ஆஜராகும் முக்கிய குற்றவாளிகள்

Update: 2023-04-28 01:54 GMT

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு வெள்ளிக்கிழமையன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்கு குறித்த விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், வெள்ளியன்று நடைபெற உள்ள விசாரணையில் கடந்த ஒரு மாதத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் உட்பட எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது என சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். செல்போன் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விசாரணை ஆகியவற்றின் தற்போதை நிலைமை குறித்தும்,

சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை வாயிலாக தெரிவிக்கவுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, தீபு, உள்ளிட்ட 10 பேரும் ஆஜராக உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்