கோயம்பேடு சந்தையில் சிறப்பு கடைகள் - கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரம்
வரும் திங்கள்கிழமை, தீபாவளி பண்டிகையை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக பூஜை பொருள்கள் விற்பனை செய்வதற்காகவும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் சிறப்பு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கரும்பு, வாழை, தோரணங்கள் உள்ளிட்ட பூஜை பொருள்கள் வாங்குவதற்காக இந்த சிறப்பு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கரும்பு ஒரு கட்டு 400 ரூபாய்கும், வாழை மரக்கன்று 60 ரூபாய்க்கும், தோரணங்கள் 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால், 9 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.