பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அலப்பறை கிளப்பிய இளைஞர்கள்

Update: 2024-11-14 15:58 GMT

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்ற இளைஞர் பொதிகை அறக்கட்டளை என்ற பெயரில், வட்டி இல்லா கடன், ரியல் எஸ்டேட் உள்ளிட்டவைகளை மேற்கொண்டு சுய விளம்பரம் தேடி வந்ததாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் தனது பிறந்த நாளன்று தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக கேக் வெட்டி கொண்டாடுவதோடு, புதிய கட்சி ஒன்றை தொடங்க விருப்பதாகவும் அதன் பெயரை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார் கிருஷ்ணன்...

இந்த நிலையில் அவரது நண்பர்கள் புதிய பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கூடி, அலப்பறையை கிளப்பியுள்ளனர்..

மேளத்தாளம் முழங்க ஆட்டத்தை தொடங்கிய அக்கும்பல், கிருஷ்ணனுக்கு ஆள் உயர மாலை அணிவித்து, சொகுசு காரின் முன் பகுதியில் கேக் வைத்து, கேக்கில் சமூக நீதி காத்த சரித்திர நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேளத்தாள சத்தம் காதை கிழிக்க...கேக் ஊட்டியப்படி போஸ் கொடுக்க...இந்த கொண்டாட்டம் தொடர்பாக தென்காசி போலீசாருக்கு தகவல் பறந்தது...

இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த தென்காசி காவல் ஆய்வாளர் ராபர்ட் ஜெயின் தலைமையிலான போலீசார், அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டதாக கூறி இளைஞரை கைது செய்து அதிரடி காட்டினர்...

பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்ராசிட்டியில் ஈடுபடும் பலருக்கு பாடமாக மாறியுள்ளது இச்சம்பவம்.

Tags:    

மேலும் செய்திகள்