`கல்லூரி சான்றிதழ்' - புரொபஸர் செய்த கேவலம்... பாத் ரூமுக்குள் தப்பி ஓடி... பெண் செய்த மிரட்டல் சம்பவம்

Update: 2024-11-14 16:19 GMT

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.எஸ்.சி. பட்டதாரியான அந்த பெண், கோவையில் தாம் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு நின்று விட்டார். வேலைக்குச சேரும்போது தனியார் நிறுவனம் வாங்கிய கல்விச் சான்றிதழை தர மறுத்ததால், கோவை கல்லூரியில் தான் படிக்கும்போது வகுப்பெடுத்த கல்வீரம்பாளையத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்ற பேராசிரியரின் உதவியை நாடினார். சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை தொடர்பு கொண்ட சிவபிரகாசம் சான்றிதழை தாம் வாங்கி வைத்திருப்பதாக கூறி, தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து அவருடைய வீட்டுக்குச் சென்ற அந்த பெண்ணை சிவப்பிரகாசம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அவரிடம் தப்பிய இளம்பெண், வீட்டின் குளியல் அறைக்குள் புகுந்து, அங்கிருந்து தனது தோழிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவருடைய தோழி மூலம் வடவள்ளி போலீசார், செல்போன் சிக்னலை வைத்து, அந்த வீட்டுக்குச் சென்று இளம்பெண்ணை மீட்டனர். இதையடுத்து சிவப்பிரகாசத்தை போலீசார் கைது செய்து, கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடமும், இளம்பெண்ணிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்