வைகைச்செல்வன் பற்றவைத்த வெடி... "MGR பற்றி பல விஷயங்களை வெளியிடுவோம்" - எச்சரித்த சிவாஜி பேரவை

Update: 2022-12-29 03:59 GMT

'எம்.ஜி.ஆர் படம் நூறு நாள் ஓடும், சிவாஜி படம் ஓடாது' என ட்வீட் செய்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனின் ஒற்றை ட்வீட், சிவாஜி சமூக நலப்பேரவை அமைப்பினரை கொந்தளிக்க செய்துள்ளது.

இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் ட்வீட் செய்துள்ள வைகைச்செல்வன், ஓ.பன்னீர்செல்வம் நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சிவாஜி படம் போல் எதிர்பார்த்த அளவு ஓடாது என்றும், எடப்பாடி பழனிசாமி நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எம்.ஜி.ஆர் படம் போல் நூறு நாள் தாண்டி ஓடும் என்றும் ஒப்பீட்டு ட்வீட் செய்திருந்தார்.

இந்த ட்வீட் சிவாஜி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பலரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சிவாஜி சமூக நலப்பேரவை, அதிமுகவில் நடக்கும் குழாயடிச்சண்டையில் தேவையில்லாமல் சிவாஜியை இழுத்தால், எம்.ஜி.ஆர் பற்றி பல தகவல்களை வெளியிட வேண்டி வரும் என எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்