கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதலமைச்சராக சித்தராமையா நாளை பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். அந்த வகையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடப்பட்ட நிலையில், ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் காரணமாக அவர் பங்கேற்கமாட்டார் எனவும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.